2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக் குழுநிலைப் போட்டிகள்: றோமாவை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான குழு ஜி போட்டியொன்றில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.

றோமாவின் பின்கள வீரரான பெடெரிக்கோ பஸியோ விட்ட தவறைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரரான கரெத் பேல், போட்டியின் 47ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், அடுத்த 12ஆவது நிமிடத்தில் றியல் மட்ரிட்டின் லூகா மோட்ரிட்ச், அவரின் சக வீரர் கரிம் பென்ஸீமாவிடம் கொடுத்த பந்தை இலாவகமாக அவர் லூகாஸ் வஸ்கூஸிடம் கொடுக்க அவர் அதைக் கோலாக்கிய நிலையில் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்று இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தமது குழுவில் முதலிடத்தை நிலைநிறுத்திக் கொண்டது.

இதேவேளை, இப்போட்டிக்கு முன்னர் இடம்பெற்ற குழு ஜியிலுள்ள கழகங்களுக்கிடையிலான மற்றைய போட்டியில் ரஷ்யக் கழகமான சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் செக் குடியரசிக் கழகமான விக்டோரியா பிளஸின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையில், றியல் மட்ரிட்டும் றோமாவும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டன.

இதேவேளை, இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற வேறு குழுப் போட்டிகளின் அடிப்படையில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகியனவும் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற முக்கிய போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு

லயோன் அணியின் மைதானத்தில் குழு எவ்

மன்செஸ்டர் சிற்றி 2 – 2 லயோன்

முதற்பாதி முடிவில் 0-0

அய்மெரிக் லபோர்டே 62   மக்ஸ்வெல் கொர்னெட் 55, 81

சேர்ஜியோ அகுரோ 83

ஜுவென்டஸின் மைதானத்தில், குழு எச்

ஜுவென்டஸ் 1 – 0 வலென்சியா

முதற்பாதி முடிவில் 0-0

மரியோ மண்டூஸிக் 59

பெயார்ண் மியூனிச்சின் மைதானத்தில், குழு ஈ

பெயார்ண் மியூனிச் 5 – 1 பெய்பிக்கா

முதற்பாதி முடிவில் 3-0

ஆர்ஜன் ரொபின் 13, 30    கெட்ஸன் பெர்ணான்டஸ் 46

றொபேர்ட் லெவன்டோஸ்கி 36, 51

பிராங்க் றிபெரி 76

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில், குழு எச்

மன்செஸ்டர் யுனைட்டெட் 1 – 0 யங் போய்ஸ்

முதற்பாதி முடிவில் 0-0

மெளரானே பெலைனி 90+1


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .