2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சொல்க்ஜரைப் பிரதியிடுகிறார் அல்லெகிரி?

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராக ஒலெ குனார் சொல்க்ஜரை இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸின் முன்னாள் முகாமையாளர் மாஸிமில்லியானோ பிரதியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜுவென்டஸின் முகாமையாளராக ஐந்து ஆண்டுகள் இருந்து ஐந்து சீரி ஏ பட்டங்களை வென்றிருந்த மாஸிமில்லியானோ அல்லெகிரி கடந்த பருவகாலத்தில் ஜுவென்டஸை விட்டு விலகியிருந்த நிலையில் ஆங்கிலத்தைக் கற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் கடந்த 30 ஆண்டுகளில் மோசமான ஆரம்பத்தைப் பெற்றுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட் இதுவரை விளையாடியுள்ள எட்டுப் போட்டிகளில் இரண்டு போட்டிகளிலேயே வென்றுள்ளதுடன், மூன்று போட்டிகளை சமன் செய்து, மூன்று போட்டிகளில் தோற்று ஒன்பது புள்ளிகளுடன் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் 12ஆம் இடத்தில் காணப்படுகின்றது.

ஆக, தமது மைதானத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லிவர்பூலுக்கெதிரான போட்டியில் கடுமையான தோல்வியொன்றை மன்செஸ்டர் யுனைட்டெட் சந்திக்கும் பட்சத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் பதவியிலிருந்து ஒலெ குனார் சொல்க்ஜர் நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஒலெ குனார் சொல்க்ஜரை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராகப் பிரதியிடுவதில் இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முகாமையாளரான மெளரிசியோ பொச்செட்டினோவே முன்னிலையில் உள்ளபோதும், மாஸிமில்லியானோ அல்லெகிரியின் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .