2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செல்சியை வென்றது யுனைட்டெட்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியின் முதலாவது பாதியின் முடிவில் சக மத்தியகளவீரர் ஆரோன் வான்-பிஸாகாவிடமிருந்து பெற்ற பந்தை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான அன்டோனி மார்ஷியல் தலையால் முட்டிக் கோலாக்கிய நிலையில் அவ்வணி முன்னிலை பெற்றது.

பின்னர், இரண்டாவது பாதியின் 16ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் ப்ரூனோ பெர்ணான்டஸின் மூலையுதையை மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரும், பின்களவீரருமான ஹரி மக்குவாயா தலையால் முட்டிக் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

முதலாவது பாதியில் செல்சியின் முன்களவீரர் மிச்சி பச்சுவாயை ஹரி மக்குவாயா உதைந்து, இச்சம்பவம் காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் நோக்கப்பட்டபோதும் ஹரி மக்குவாயாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்சியின் பின்களவீரர் கேர்ட் ஸூமா கோலெண்ணிக்கையை 1-1 என்ற ரீதியில் சமப்படுத்தியது போலத் தோன்றியபோதும், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் பிரண்டன் வில்லியம்ஸை செல்சியின் அணித்தலைவரும் பின்களவீரருமான சீஸர் அத்பிலிகெட்டா தள்ளியதற்காக காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பால் நிராகரிக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், சீஸர் அத்பிலிகிட்டாவின் முதுகியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மத்தியகளவீரர் பிரட் கைவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய சக மத்தியகளவீரரான மேஸன் மெளன்டின் பிறீ கிக்கை போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்சியின் முன்களவீரர் ஒலிவர் ஜிரூட் தலையால் முட்டிக் கோலாக்கியபோது, பிறீ கிக்கை ஒலிவர் ஜிரூட் சந்திக்கும்போது அவரின் கால் ஓஃப் சைட்டில் இருந்தது என அக்கோல் நிராகரிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .