2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சான்செஸ் விலக மாட்டார்’

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்சனல் அணியின் அலெக்ஸிஸ் சான்செஸ், ஆர்சனல் கழகத்திலிருந்து விலக மாட்டார் என, ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சீன் வெங்கர், நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தனது ஒப்பந்தக் காலம் முழுவதற்கும், அவர் செல்சி அணியில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்ட அவர், ஒப்பந்தம் முடிந்த பின்னர், நீட்டிப்பு ஒப்பந்தத்திலும் அவர் கைச்சாத்திடுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முன்கள வீரரான சான்செஸின் ஆர்சனல் ஒப்பந்தத்தில், இன்னும் ஓர் ஆண்டு எஞ்சிக் காணப்படுகிறது. ஆனால், ஒப்பந்த நீட்டிப்பு எதிலும் அவர் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பதோடு, பெயார்ண் மியூனிச் அல்லது மன்செஸ்டர் சிற்றி அணிக்கு அவர் செல்வார் என்று பேச்சுகள் எழுந்திருந்தன.

ஐக்கிய இராச்சியத்தில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, சுமார் 103 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு, அவர் வேறு அணிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது.

எனினும், இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது கருத்துத் தெரிவித்த வெங்கர், “வீரர்களுக்கு ஒப்பந்தம் உள்ளது. அதை அவர்கள் மதிப்பார்களென நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுதான் எமக்கு வேண்டும்” என்று தெரிவித்தார். சான்செஸை அணியில் வைத்திருப்பதில் உறுதியாக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, “ஆம். கடந்த பருவகால முடிவில் நான் கதைத்த தொடர்ச்சி என்பது அது தான். அதைத் தான் நாம் செய்வோம். குழாமுக்கு, சிறந்த பெறுமதியை அவர் வழங்குகிறார். கழகத்தை அவர் அதிகளவில் நேசிக்கிறார் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .