2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் ஹமில்டன்

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸில், அபாரமாக தனது காரைச் செலுத்திய, மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றதோடு, இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், தனது வைரியான,ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டலுக்கும் தனக்குமான புள்ளிகள் வித்தியாசத்தையும் அதிகரித்துக் கொண்டார்.

தகுதிநிலை காணும் பந்தயத்தில் தடுமாறியதைத் தொடர்ந்து, நேற்று  (17) இடம்பெற்ற பந்தயத்தில், ஐந்தாம் நிலையிலிருந்தே லூயிஸ் ஹமில்டன் ஆரம்பித்தபோதும், முதலாம் நிலையிலிருந்து ஆரம்பித்த வெட்டல், சக ஃபெராரி அணி ஓட்டுநரான, பின்லாந்தின் கிமி றைக்கோனனுடனும் றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பனுடனும் பந்தயத்தின் ஆரம்பத்திலேயே மோதுண்ட நிலையில், நான்காவது வளைவுக்கிடையில் முன்னிலை பெற்றார்.

இப்பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியை விட ஃபெராரி அணி சாதகத் தன்மைகளைக் கொண்டிருந்த நிலையில், இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், வெட்டல் மீண்டும் முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பந்தயத்தின் முடிவில், இவ்வாண்டில், இன்னும் ஆறு பந்தயங்கள் மீதமிருக்கின்ற நிலையில், 28 புள்ளிகள் முன்னிலையுடன் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகின்றார். வெட்டல் ஏனைய கார்களுடன் மோதுண்டமை, இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியன்ஷிப்பின் திருப்புமுனையாக நோக்கப்படுகிறது.

வெட்டல், றைக்கோனன், வெர்ஸ்டப்பனின் முதலாவது திருப்ப மோதலைத் தவிர்த்து, றெட் புல் அணியின் அவுஸ்திரேலிய ஓட்டுநரான டேனியல் றிச்சியார்டோவை தாண்டியே முன்னிலை பெற்றார். கடந்த வாரயிறுதி முழுவதும் மெர்சிடிஸ் அணியின் கார்களை விட றெட் புல் அணியின் கார்கள் வேகமானவையாக இருந்தபோதும் ஒவ்வொரு சுற்றையும் மிக வேகமாகக் கடந்த ஹமில்டன் வெற்றிபெற்றார்.

ஈரமான ஓடுபாதையிலேயே பந்தயம் ஆரம்பித்தபோதும், ஏறத்தாழ அரைவாசித் தூரத்துக்கு உலரந்ததாகவே காணப்பட்டிருந்தது. இப்பந்தயத்தில், மூன்று தடவைகள் பாதுகாப்பு கார்கள் வந்திருந்த நிலையில், இரண்டு மணித்தியால எல்லையில், திட்டமிடப்பட்ட 61 சுற்றுகளுக்குப் பதிலாக 58 சுற்றுக்களே இடம்பெற்றிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .