2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிம்பாப்வே குழாம்கள் அறிவிக்கப்பட்டன

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, சிம்பாப்வேக்கிடையேயான தொடரில் பங்கேற்கவுள்ள சிம்பாப்வே குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், இறுதியாக, கடந்தாண்டு மார்ச்சில், சர்வதேசப் போட்டியொன்றை விளையாடிய இடதுகை சுழற் பந்துவீச்சாளர் வெலிங்டன் மஸகட்ஸா இடம்பெற்றுள்ளார்.   

இதேவேளை, சுழற்பந்து வீச்சாளர் நட்ஸாய் மஷியங்கே, டெஸ்ட் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், சிம்பாப்வே சார்பில் இதுவரையில் விளையாடியிருக்காத சகலதுறை வீரர் நேதன் வொலர், டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.   

ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாம்: சொலொமன் மிரே, ஹமில்டன் மசகட்சா, றயான் பேர்ள், கிரேமி கிறீமர் (அணித்தலைவர்), கிரேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், பீற்றர் மூர் (விக்கெட் காப்பாளர்), சிகண்டர் ராசா, டென்டாய் சட்டாரா, கிறிஸ் மெபு, டொனால்ட் ட்ரிபானோ, றிச்சர்ட் நகரவா, வெலிங்டன் மசகட்சா, மல்கொம் வோலர், சமு சிபாபா, டரிசை முசுகண்டா  

டெஸ்ட் குழாம்: றெஜிஸ் சகப்வா, ஹமில்டன் மசகட்சா, றயான் பேர்ள், கிரேமி கிறீமர் (அணித்தலைவர், கிரேய்க் எர்வின், ஷோன் வில்லியம்ஸ், பீற்றர் மூர் (விக்கெட் காப்பாளர்), சிகண்டர் ராசா, டென்டாய் சட்டாரா, கிறிஸ் மெபு, டொனால்ட் ட்ரிபானோ, நதன் வோலர், நட்ஸாய் மஷியங்கே, மல்கொம் வோலர், கார்ல் மும்பா, டரிசை முசுகண்டா  

2001ஆம் ஆண்டுக்கு பிறகு, முதன்முறையாக, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.   

இந்நிலையில், சிம்பாப்வேக்கெதிரான, முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கும் இலங்கைக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழாமில், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் டினேஷ் சந்திமால் இடம்பெறாத நிலையில், இலங்கைக்காக இதுவரையில் விளையாடியிருக்காத சகலதுறை வீரர் வனிடு ஹசரங்க இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய, வேகப்பந்து வீச்சாளர்கள் லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் குழாமுக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.   

குழாம்: அஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க, நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், அசேல குணரத்ன, வனிடு ஹசரங்க, லக்‌ஷன் சந்தகான், அகில தனஞ்சய, நுவான் பிரதீப், லசித் மலிங்க, துஷ்மந்த சமீர, லஹிரு மதுஷங்க  

இந்நிலையில், இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் பதவி விலகியுள்ள நிலையில், இடைக்கால பயிற்சியாளராக நிக் போத்தாஸ் நியமிக்கப்பட்டுளார். கடந்தாண்டு ஓகஸ்ட் மாதம் முதல், இலங்கையின் களத்தடுப்புப் பயிற்சியாளராக இருக்கும் போத்தாஸ், இந்தியா தொடர் வரைக்கும், இலங்கையில் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்.     

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .