2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிம்பாப்வேக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய முதலாம் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியில் சிம்பாப்வே வெற்றிபெற்ற நிலையில், டாக்காவில் இன்று ஆரம்பமான இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் பதில் தலைவர் மகமதுல்லா, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

பங்களாதேஷ் அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமட் அறிமுகத்தை மேற்கொண்டதோடு, மொஹமட் மிதுன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர். இவர்கள் இருவரோடு முஸ்தபிசூர் ரஹ்மான், அபு ஜயேட், நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, நஸ்முல் இஸ்லாமை அணியின் பிரதியியீடு செய்தனர். சிம்பாப்வே சார்பாக, சுழற்பந்துவீச்சாளர் வெலிங்டன் மசகட்ஸாவை வேகப்பந்துவீச்சாளர் டொனால்ட் ட்ரிபானோ பிரதியீடு செய்திருந்தார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 303/5 (துடுப்பாட்டம்: மொமினுல் ஹக் 161, முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 111 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 3/48, டென்டாய் சட்டாரா 1/28, டொனால்ட் ட்ரிபானோ 1/33)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .