2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேயை வெள்ளையடித்தது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று முன்தினம்இடம்பெற்ற முதலாவது போட்டியில் வென்றிருந்த ஆப்கானிஸ்தன், நேற்று  இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் 17 ஓட்டங்களால் வென்று 2-0 என சிம்பாப்வேயை வெள்ளையடித்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சிம்பாப்பே அணியின் தலைவர் கிறேமி கிறீமர், தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொஹமட் நபி 45 (26), கரிம் சாதிக் 28 (30), அணித்தலைவர் அஸ்கர் ஸ்டனிஸ்காய் 27 (14) மற்றும் நஜிபுல்லா ஸட்ரான் 24 (18) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டென்டாய் சட்டாரா 3, கிறேமி கிறீமர், கைல் ஜார்விஸ், பிளஸிங் முஸர்பனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 159 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை 141 ஓட்டங்களையே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சிகண்டர் ராசா 40 (26) றயான் பேர்ள் 30 (30), ஹமில்டன் மஸகட்ஸா 29 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், முஜீப் உர் ரஹ்மான், ரஷீட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, மொஹமட் நபி தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X