2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிற்றி, ஆர்சனல் வென்றன

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

நடப்பு பருவகால பிறீமியர் லீக்கின் சம்பியன்களான தம்மை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள மன்செஸ்டர் சிற்றி, தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றியை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, டேவிட் சில்வா, ரஹீம் ஸ்டேர்லிங், கெவின் டி ப்ரூனே, பெர்னார்டோ சில்வா, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, நடப்பு பருவகாலத்துடன் தமது முகாமையாளர் ஆர்சீன் வெங்கர் விலகுவதாக அறிவித்த பின்னரான தமது முதலாவது போட்டியில், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டை எதிர்கொண்ட ஆர்சனல் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே இரண்டு கோல்களையும் நாச்சோ மொன்றியல், ஆரோன் றாம்ஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னாவுடோவிக் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .