2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிற்றி, யுனைட்டெட், டொட்டென்ஹாம் வென்றன

Editorial   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், மன்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் யுனைட்டெட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

மன்செஸ்டர் சிற்றி, 4-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றியை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, டேவிட் சில்வா 2 கோல்களையும் கெவின் டி ப்ரூனே, சேர்ஜியோ அகுரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

மன்செஸ்டர் யுனைட்டெட், 1-0 என்ற கோல் கணக்கில் ஏ.எப்.சி போர்ண்மெத்தை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெற்ற கோலை றொமேலு லுக்காக்கு பெற்றார்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனை வென்றது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சேர்ஜி ஒறியர், சொன் ஹியூங் மின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, லிவர்பூல், வெஸ்ட் ப்ரோம்விச் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதேபோன்று, ஆர்சனல், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் அணிகளுக்கிடையிலான போட்டியிலும்  இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .