2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செல்சி – பார்சிலோனா போட்டி சமநிலை

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சிக்கும் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்குமிடையிலான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

தமது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதற்பாதியில் வில்லியனின் இரண்டு உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், போட்டியின் 62ஆவது நிமிடத்தில் அவர் பெற்ற கோல் காரணமாக செல்சி முன்னிலை பெற்றது.

எவ்வாறெனினும், செல்சியின் அன்ட்ரயாஸ் கிறிஸ்டென்ஸன் வழங்கிய தவறுதலான பந்துப் பரிமாற்றமொன்றை பெற்றுக் கொண்ட அன்ட்ரயாஸ் இனியஸ்டா லியனல் மெஸ்ஸிக்கு கொடுக்க, அவர் அதை போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கோலாக்க போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

அந்தவகையில், இதற்கு முன்னர் செல்சியுடனான எட்டு சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் கோலைப் பெற்றிக்காத மெஸ்ஸி இப்போட்டியிலேயே கோலைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற தமது இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில், துருக்கியக் கழகமான பெஸ்கிட்டாஸை 5-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா லீக்கின் நடப்புச் சம்பியன்களான பெயார்ண் மியூனிச் வென்றிருந்தது. பெயார்ண் மியூனிச் சார்பாக, தோமஸ் முல்லர், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்ததோடு, கிங்ஸ்லி கோமன் ஒரு கோலைப் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .