2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செவில்லாவிடம் தோற்றது பார்சிலோனா

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரில், செவில்லா அணியின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான காலிறுதிப் போட்டியொன்றின் முதலாவது சுற்றில் பார்சிலோனா தோற்றது.

இப்போட்டியின் 30ஆவது நிமிடத்தைத் தொடர்ந்து காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பின் உதவியுடன் பார்சிலோனாவின் மத்தியகள வீரர் அர்துரோ விடால், செவில்லாவின் மத்தியகள வீரர் எவெர் பனீகாவின் உதையை கையாளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டபோதும் அவரது கையில் பந்து பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தனியே முன்னேறிச் சென்ற செவில்லாவின் முன்கள வீரர் விஸாம் பென் யெடரின் உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் ஜஸ்பர் சில்சன் தடுத்திருந்தார். மறுபக்கத்தில், முதற்பாதி முடிவில் பார்சிலோனாவின் முன்கள வீரர் மல்கொம் உதைந்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்ல முதற்பாதியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாது 0-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில் செவில்லாவின் முன்கள வீரர் குயின்ஸி புரோமிஸ் சக மத்தியகள வீரர் பப்லோ சரபியாவிடம் கொடுத்த பந்தை அவர் கோலாக்க செவில்லா முன்னிலை பெற்றது. பின்னர் 76ஆவது நிமிடத்தில் விஸாம் பென் யெடர் பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் செவில்லா வென்றது.

இந்நிலையில், தான் கோல் பெற்றவுடன் தனது மேலங்கியைத் தூக்கி, தனது விமானம் ஆங்கிலக் கால்வாயின் மேல் காணமல் போனதைத் தொடர்ந்து காணாமல் போயுள்ள ஆர்ஜென்டீன முன்கள வீரரான எமிலியானோ சாலாவை நினைவுறுத்தும் முகமாக, “எனது சகோதரர் சாலாவுக்காக” என்ற தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .