2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

செவில்லாவை வென்றது பார்சிலோனா

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், செவில்லாவை பார்சிலோனா வென்றது.

இப்போட்டியில், லூயிஸ் சுவாரஸிடமிருந்து நீண்ட தூரப் பந்துப் பரிமாற்றமொன்றில் பந்தைப் பெற்ற பக்கோ அல்கேஸர், போட்டியின் 23ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று பார்சிலோனாவுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர் போட்டியின் 59ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற செவில்லாவின் குய்டோ பிஸாரியோ கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். எவ்வாறெனினும், இவான் றகிட்டிச்சிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கோலாக்கிய பக்கோ அல்கேஸர், 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

குறித்த இரண்டு கோல்கள் தவிர, பக்கோ அல்கேஸர் தலையால் முட்டிய பந்தொன்று கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது. இது தவிர, ஜெராட் பிகேயின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது. பார்சிலோனாவுக்கான தனது 600ஆவது போட்டியாக குறித்த போட்டியில் விளையாடிய லியனல் மெஸ்ஸி கோலெதனையும் பெற்றிருக்காதபோதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை இடம்பெற்ற வேறு இரண்டு போட்டிகளில், வலென்சியா, 3-0 என்ற கோல் கணக்கில் லெகனிஸை வென்றதுடன், அத்லெட்டிகோ மட்ரிட், 1-0 என்ற கோல் கணக்கில் டெபோர்ட்டிவா லா கொரானாவை வென்றிருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், 31 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகின்றது. அதேபோல் 27 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் வலென்சியா தொடருகின்றது. 23 புள்ளிகளைப் பெற்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்திலுள்ளது. 20 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் றியல் மட்ரிட்டும் 19 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் செவில்லாவும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .