2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸை வென்றது நாப்போலி

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று  நடைபெற்ற போட்டியில், நாப்போலியின் பின்கள வீரர் கலிடு குலிபலி இறுதி நேரத்தில் பெற்ற கோலால் நாப்போலியிடம் ஜுவென்டஸ் தோல்வியடைந்தது.

இப்போட்டியில், நாப்போலியில் முன்கள வீரர்களை எதிர்கொள்ள உறுதியான பின்களம் தேவையென்ற போதிலும் போட்டியின் ஆரம்பத்திலேயே நாப்போலியின் முன்கள வீரர் லொரென்ஸோ இன்சீனியாவுடன் மோதிய ஜுவென்டஸின் பின்கள வீரர் ஜோர்ஜியோ செலினி காயமடைந்தார். இந்நிலையில், ஜோர்ஜியோ செலினியை ஸ்டெபான் லிச்ஸ்டைனர் பிரதியீடு செய்தார்.

தொடர்ந்த ஆட்டத்தில், ஜுவென்டஸின் கொன்ஸலோ ஹியூகைன், நாப்போலியின் றாவுல் அல்பியோலால் விதிமுறைகளுக்கு மீறி கையாளப்பட்ட ஜுவென்டஸுக்கு பிறீ கிக் வழங்கப்பட்டது. எனினும் மிரலெம் பிஜானிக் செலுத்திய குறித்த உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.

இதையடுத்து, போட்டியின் 21ஆவது நிமிடத்தில் நாப்போலியின் மரியோ ருய் உதைந்த உதையொன்றை ஜுவென்டஸின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி புபான் தட்டி விட்டிருந்தார். தொடர்ந்த ஆட்டத்தில், மரியோ ருய் சக வீரர் மரேக் ஹம்சிக்கிடம் கொடுத்த பந்தை அவர் உதைய அது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. இந்நிலையில், போட்டியின் முதற்பாதி முடிவில் லொரென்ஸோ இன்சீனியா கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்தியபோதும் அவர் ஓவ் சைட்டில் காணப்பட்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்திலேயே, போட்டியின் இறுதி நிமிடத்தில், நாப்போலியின் ஜோஸே கல்லகோன் உதைந்த மூலையுதையை, தலையால் முட்டி கலிடு குலிபலி கோலாக்க 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றொரு போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் சம்ப்டோரியாவை லேஸியோ வென்றிருந்தது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் இரண்டு கோல்களையும் சேர்ஜி மிலின்கோவிக்-சவிக், ஸ்டெபான் டி வேர்ஜி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இந்நிலையில், இன்டர் மிலன் 2-1 என்ற கோல் கணக்கில் செய்வோ வெரோனா அணியை வென்றிருந்தது. இன்டர் மிலன் சார்பாக, மெளரோ இகார்டி, இவான் பெரிசிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் செய்வோ வெரோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை மரியுஸ் ஸ்டெபின்ஸ்கியும் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 85 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஜுவென்டஸை விட ஒரு புள்ளி குறைவாக 84 புள்ளிகளுடன் நாப்போலி இரண்டாமிடத்திலும் காணப்படுகின்றன. றோமாவும் லேஸியோவும் தலா 67 புள்ளிகளையே கொண்டிருக்கின்றபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் றோமா மூன்றாமிடத்திலும் லேஸியோ நான்காமிடத்திலும் காணப்படுவதோடு, இவற்றை விட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள இன்டர் மிலன் 66 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.

ஒவ்வோர் அணியும் இன்னும் தலா நான்கு போட்டிகளைக் இன்னும் கொண்டிக்கின்ற நிலையில், றோமா, இன்டர் மிலன் உள்ளிட்ட அணிகளை அவற்றின் மைதானத்தில் கடந்த ஆறு தடவைகள் சம்பியனான ஜுவென்டஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .