2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜுவென்டஸ் – பர்மா போட்டி சமநிலை

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற பர்மாவுடனான போட்டியில், தமது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் பெற்றபோதும், ஜெர்வின்ஹோ பெற்ற கோல்களால் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் பிளெய்ஸி மத்தியூடியிடமிருந்து பெற்ற பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்க ஜுவென்டஸ் முன்னிலை பெற்றது. பின்னர், 62ஆவது நிமிடத்தில் தமது வீரர் டேனியல் றுகனி பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை ஜுவென்டஸ் இரட்டிப்பாக்கியது.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில், சக மத்தியகள வீரர் ஜுராஜ் குச்காவிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய பர்மாவின் இன்னொரு மத்தியகள வீரரான அன்டோனினோ பரில்லா, ஜுவென்டஸின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார். எவ்வாறாயினும், அடுத்த இரண்டாவது நிமிடத்தில், சக முன்கள வீரர் மரியோ மண்டூஸிக்கிடமிருந்து வந்த பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்டஸுக்கு மீண்டும் இரண்டு கோல் முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், 74ஆவது நிமிடத்தில் ஜுராஜ் குச்காவிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய பர்மாவின் முன்கள வீரரான ஜெர்வின்ஹோ, ஜுவென்டஸின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்ததுடன், போட்டியின் இறுதி நிமிடங்களில் சக முன்கள வீரர் றொபேர்ட்டோ இங்லிஸிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கியதோடு, போட்டி இறுதியில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற சம்ப்டோரியா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி அணி வென்றது. நாப்போலி அணி சார்பாக, அர்க்கடியுஸ் மிலிக், லொரென்ஸோ இன்சீனியா, சிமோனே வெர்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .