2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜேர்மனியை வென்றது நெதர்லாந்து

Editorial   / 2018 ஒக்டோபர் 14 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக் தொடரில், நெதர்லாந்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ1 போட்டியொன்றில் ஜேர்மனியை நெதர்லாந்து வென்றது.

இப்போட்டியில், நெதர்லாந்தின் மெம்பிஸ் டிபே உதைந்த மூலையுதையை அவ்வணியின் றயான் பாபெல் தலையால் முட்டி அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வந்திருந்த நிலையில், கோல் கம்பத்துக்கு அருகிலிருந்த நெதர்லாந்தின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக் தலையால் முட்டிப் பெற்ற கோல் மூலம் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, நெதர்லாந்தின் ஜோர்ஜினியோ விஜ்னால்டும் கோல் கம்பத்தை நோக்கி உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்ததுடன், டிபே உதைந்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

இந்நிலையில், ஜேர்மனி சார்பாக இரண்டாவது பாதியில் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்ட லெரோய் சனே வேறெந்த வீரராலும் அடையாளப்படுத்தப்படாமல் கோல் கம்பத்திலிருந்து எட்டடி தூரத்திலிருந்தபோதும் அவர் உதைந்த உதையும் கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது.

பின்னர், அதிரடி நகர்வை மேற்கொண்ட நெதர்லாந்தின் குயின்ஸி ப்ரோமெஸ் வழங்கிய பந்தை போட்டியின் 86ஆவது நிமிடத்தில் டிபே கோலாக்கி கோலெண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். பின்னர் டிபேயின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்த நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் ஜோர்ஜினோ விஜ்னால்டும் பெற்ற கோலோடு இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.

அந்தவகையில், கடந்தாண்டு ஒக்டோபர் உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளின் பிற்பாடு, உலகக் கிண்ணத்தில் சுவீடனுக்கெதிராகப் பெற்ற வெற்றியே ஜேர்மனி பெற்ற ஒரேயொரு வெற்றியாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X