2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஜேர்மனியை வென்றது பிரேஸில்

Editorial   / 2018 மார்ச் 28 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவர்ந்த சிநேகபூர்வ கால்பந்தாட்ட போட்டிகளில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் பிரேஸில், ஸ்பெய்ன், குரோஷியா, போலந்து, பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் வென்றுள்ளன.

பிரேஸில், 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலகக் கிண்ண சம்பியன்களான ஜேர்மனியை வென்றது. பிரேஸில் சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல் ஜெஸூஸ் பெற்றார். அந்தவகையில், தாம் இறுதியாக விளையாடிய 23 போட்டிகளில் முதற்தடவையாக இப்போட்டியிலேயே ஜேர்மனி தோற்றுள்ளது.

2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன்களான ஸ்பெய்ன், 6-1 என்ற கோல் கணக்கில் கடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரை வந்த ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்தது. ஸ்பெய்ன் சார்பாக, இஸ்கோ மூன்று கோல்களையும் டியகோ கொஸ்டா, தியாகோ அல்கான்டரா, லகோ அஸ்பஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் ஒட்டமென்டி பெற்றார். அந்தவகையில், 2016ஆம் ஆண்டு யூரோ கிண்ண முதற் சுற்றிலே வெளியேறியதைத் தொடர்ந்து தற்போது வரையான 18 போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் ஸ்பெய்ன் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரோஷியா, 1-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவை வென்றது. குரோஷியா சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் றகிட்டிச் பெற்றிருந்தார்.

போலந்து, 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது. போலந்து சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, கமில் குறோசிக்கி, பியோத்தர் ஸியலின்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். தென்கொரியா சார்பாக, சங்-மின் லீ, ஹீ-சான்-ஹுவாங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

பெல்ஜியம், 4-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வென்றது. பெல்ஜியா சார்பாக றொமேலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் மிச்சி பச்சுவாய், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

பிரான்ஸ், 3-1 என்ற கோல் கணக்கில், இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடாகிய ரஷ்யாவை வென்றது. பிரான்ஸ் சார்பாக, கிலியான் மப்பே இரண்டு கோல்களையும் போல் பொக்பா ஒரு கோலையும் பெற்றனர். ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடோர் ஸ்மொலோவ் பெற்றார்.

இதேவேளை, இங்கிலாந்து, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றதோடு, இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .