2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது யுனைட்டெட்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பருடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார். டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை டெலே அலி பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது. லிவர்பூல் சார்பாக, டிவோக் ஒரிஜி இரண்டு கோல்களையும், ஸ்கொட்ரான் ஷகி, சாடியோ மனே, ஜோர்ஜினியோ விஜ்நால்டும் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாக, மைக்கல் கீன், றிச்சர்லிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற வட்ஃபேர்ட்டுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜேமி வார்டி, ஜேம்ஸ் மடின்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற அஸ்டன் வில்லாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம், மேஸன் மெளன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அஸ்டன் வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை மஹ்மூட் ஹஸன் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 43 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகிறது. இரண்டாமிடத்தில், லிவர்பூலை விட எட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்ற லெய்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது.  மூன்றாமிடத்தில், லெய்செஸ்டரை விட மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகிறது. நான்காமிடத்தில், மன்செஸ்டர் சிற்றியை விட மூன்று புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள செல்சி காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .