2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெஸ்ட் குழாமிலிருந்து பிராவோ நீக்கம்

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகளின் டெஸ்ட் குழாமிலிருந்து சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் டரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரான இந்தியாவுக்கெதிரான நான்கு இனிங்ஸ்களில் 15.66 என்ற சராசரியில் 47 ஓட்டங்களையே டரன் பிராவோ பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஷனொன் கப்ரியல் காயமடைந்துள்ள நிலையில் அவரை இளம் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் பிரதியிட்டுள்ளார்.

இதுதவிர, விக்கெட் காப்பாளர்கள் ஷேன் டெளரிச், ஷே ஹோப் ஆகியோர் உடற்றகுதியைப் பெற்ற நிலையில் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ஜஹ்மர் ஹமில்டன் குறித்த குழாமில் இடம்பெற்றிருக்காத நிலையில், சுழற்பந்துவீச்சாளர் ஜோமெல் வொரிக்கானும், சுனில் அம்பிறிஸும் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.

குழாம்: ஜேஸன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஷே ஹோப், ஜோன் கம்பெல், கிரேய்க் பிறத்வெய்ட், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷமராஹ் ப்றூக்ஸ், றொஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச், சுனில் அம்பிறிஸ், ஜோமெல் வொரிக்கான், ரஹீம் கோர்ன்வெல், கேமார் றோச், கீமோ போல், அல்ஸாரி ஜோசப்.

இதேவேளை, ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டி தொடருக்கான குழாம்களில் கரீபியன் பிறீமியர் லீக்கில் பிரகாசித்த சுழற்பந்துவீச்சாளர்கள் ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர், கரி பியரி மற்றும் துடுப்பாட்டவீரர் பிரண்டன் கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் கெரான் பொலார்ட்டின் தலைமையில் முதன்முறையாக மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கவுள்ள நிலையில் இவ்விரண்டு குழாம்களிலும் கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதுமுக வேகப்பந்துவீச்சாளர் றொமாரியோ ஷெப்பேர்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, கரீபியன் பிறீமியர் லீக்கில் பிரகாசித்த துடுப்பாட்டவீரர் லென்டில் சிமொன்ஸ், விக்கெட் காப்பாளர் டினேஷ் ராம்டீன், வேகப்பந்துவீச்சாளர் கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமுக்கு திரும்பியுள்ள நிலையில், முன்னாள் தலைவர் கார்லோஸ் பிறத்வெய்ட், ஒஷேன் தோமஸ் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.

இ-20 குழாம்: கெரான் பொலார்ட் (அணித்தலைவர்), நிக்கலஸ் பூரான், எவின் லூயிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட், பிரண்டன் கிங், ஃபேபியன் அலன், ஜேஸன் ஹோல்டர், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர், லென்டில் சிமொன்ஸ், காரி பியரி, ஷெல்டன் கோட்ரன், டினேஷ் ராம்டீன், கெஸ்ரிக் வில்லியம்ஸ், அல்ஸாரி ஜோசப்.

ஒ.நா.ச.போ குழாம்: கெரான் பொலார்ட் (அணித்தலைவர்), ஷே ஹோப், எவின் லூயிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், சுனில் அம்பிறிஸ், நிக்கலஸ் பூரான், பிரண்டன் கிங், றொஸ்டன் சேஸ், ஜேஸன் ஹோல்டர், ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர், காரி பியரி, ஷெல்டன் கோட்ரல், கீமோ போல், அல்ஸாரி ஜோசப், றொமாரியோ ஷெஃபேர்ட்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .