2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டில்ருவான் பெரேரா செய்தது சரியா?

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், இலங்கையணியில் டில்ருவான் பெரேரா இன்று செய்த்ததொரு விடயம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இலங்கையணியின் முதலாவது இனிங்ஸின் 57ஆவது ஓவரில், நடுவர் நைஜல் லோங்கால் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட டில்ருவான் பெரேரா, வீரர்களின் அறை நோக்கி நடந்து விட்டு பின்னர் தீர்ப்பு மறு பரிசீலனையைக் கோரியிருந்தார்.

அப்போது ஓட்டமெதுவையும் பெறாமலிருந்த டில்ருவான் பெரேரா, பின்னர் எட்டாவது விக்கெட்டுக்காக ரங்கன ஹேரத்துடன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், தீர்ப்பு மறுபரிசீலனை திட்டத்தின்படி வீரர்களின் அறையிலிருந்து சமிஞ்சைகளைப் பெற்று தீர்ப்பு மறு பரிசீலனைக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என்ற நிலையில், வீரர்களின் அறையை நோக்கிச் சென்ற டில்ருவான் பெரேரா எதன் காரணமாக திரும்பி தீர்ப்பு மீள் பரிசீலனைக் கோரிக்கையை முன்வைத்தார் என்பது தெளிவில்லாமலுள்ளது.

இலங்கையணி வீரரொருவர் இவ்வாறு ஈடுபடுவது முதற்தடவையல்ல. அபுதாபியில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்டிலும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட குசல் மென்டிஸ், வீரர்களின் அறையை நோக்கி நடந்து விட்டு பின்னர் திரும்பி தீர்ப்பு மீள் பரிசீலனைக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இதேவேளை, இவ்வாண்டு ஆரம்பத்தில், பெங்களூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில், எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், வீரர்களின் அறையிலிருந்து ஆலோசனையை எதிர்பார்த்திருந்தமையைக் கண்ணுற்றிருந்த நடுவர்கள், குறித்த ஆட்டமிழப்புத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்வதைத் தடுத்திருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X