2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் போராடுகிறது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2018 ஜூன் 14 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் கிரிக்கெட்டின் தமது முதலாவது நாளில் ஆப்கானிஸ்தான் போராடி வருகிறது. பெங்களூரில் இன்று ஆரம்பித்த இந்திய அணிக்கெதிரானதாக அமைந்த தமது முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தியே ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணிக்கெதிராக போராடி வருகிறது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் அஜின்கியா ரஹானே தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணிக்கு, அதன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷீகர் தவான் வேகமாக ஓட்டங்களைப் பெற்று முதல் இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அதுவும் டெஸ்ட் போட்டியொன்றின் முதல்நாளில் மதியநேர இடைவேளைக்குள் சதம் பெற்ற முதலாவது இந்திய வீரராகவும் ஆறாவது சர்வதேச வீரராகவும் தனது பெயரைப் பதிவு செய்துகொண்டார்.

 இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தமது முதலாவது இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், ஹர்டிக் பாண்டியா 10 ஓட்டங்களுடனும் இரவிச்சந்திரன் அஷ்வின் ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, ஷீகர் தவான் 107, முரளி விஜய் 105, லோகேஷ் ராகுல் 54, செட்டேஸ்வர் புஜாரா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், யமீன் அஹ்மட்ஸாய் 2, வபடார், ரஷீட் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X