2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் சம்பியன்ஷிப் கோலை தக்கவைத்தது இந்தியா

Editorial   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் நேற்று முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் கோலை தக்க வைத்ததுடன், மூன்றாவது ஆண்டாக ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை இந்தியா வென்றுள்ளது.

தென்னாபிரிக்காவில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என கடந்தாண்டு ஆரம்பத்தில் தொடரை இழந்திருந்த இந்தியா, இங்கிலாந்திடம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-4 எனத் தொடரை இழந்திருந்தது. எனினும், ஆப்கானிஸ்தானை ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், மேற்கிந்தியத் தீவுகளை இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 எனவும் சொந்த மண்ணில் இந்தியா வென்றிருந்தது. தவிர, அவுஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியிருந்தது.

டெஸ்ட் சம்பியன்ஷிப் கோல் அறிமுகப்படுத்தப்பட்ட 2002ஆம் ஆண்டு அதை வென்றிருந்த அவுஸ்திரேலியா, முதல் எட்டு ஆண்டுகளுக்கு அதை வைத்திருந்தது. தற்போது, மொத்தமாக ஐந்து தடவைகள் இந்தியா வென்றுள்ளதுடன், 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்றிருந்ததுடன், 2013ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் தென்னாபிரிக்கா வென்றிருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, “சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் கோலை மீண்டுமொரு தடவை தக்கவைத்திருப்பதில் நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப்படுகிறோம். எல்லா வகையான போட்டிகளிலும் எங்களது அணி சிறப்பாக செயற்படுகிறது. ஆனால், டெஸ்ட் தரவரிசையில் முன்னிலை பெறுவது மேலதிக மகிழ்ச்சியை எங்களுக்கு அளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தையும், சிறந்தவர்கள் மட்டுமே இந்த வகைப் போட்டிகளில் மிளிரலாம் என்பதும் எங்கள் அனைவருக்கும் தெரியும்.

எங்களது அணி மிகவும் ஆழத்தைக் கொண்டிருக்கின்றது. இவ்வாண்டின் பிற்பகுதியில் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடங்கும்போதும் இது எங்களுக்கு முன்னிலையை வழங்கும். டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டுக்கு இது மேலும் முக்கியத்துவத்தை வழங்குகையில், இதை நாங்கள் ஆவலும் எதிர்பார்த்துள்ளோம்” என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .