2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

Editorial   / 2018 ஏப்ரல் 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்ட நியூசிலாந்து, முதலாவது போட்டியை வென்றிருந்தமை காரணமாக தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

இன்றைய ஐந்தாம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த நியூசிலாந்து, எட்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த இஷ் சோதி, நீல் வக்னர் ஆகியோர் போட்டி முடிவுக்கு இறுதிப் பந்தில் நீல் வக்னர் ஆட்டமிழக்கும் வரையும் 31.2 ஓவர்களுக்கு தாக்குபிடிக்க, போட்டி முடிவடையும் தருணத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றவாறிருந்த நியூசிலாந்து போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொண்டது. துடுப்பாட்டத்தில், டொம் லேதம் 83, இஷ் சோதி ஆட்டமிழக்காமல் 56, கொலின் டி கிரான்ட்ஹொம் 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேக் லீச், மார்க் வூட், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 2விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக டிம் செளதி தெரிவானதோடு, தொடரின் நாயகனாக ட்ரெண்ட் போல்ட் தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இங்கிலாந்து: 307/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 101, மார்க் வூட் 52, ஜோ றூட் 37, மார்க் ஸ்டோன்மன் 35, பென் ஸ்டோக்ஸ் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 6/62, ட்ரெண்ட் போல்ட் 4/87)

நியூசிலாந்து: 278/10 (துடுப்பாட்டம்: பி.ஜெ வட்லிங் 85, கொலின் டி கிரான்ட்ஹொம் 72, டிம் செளதி 50, நீல் வக்னர் ஆ.இ 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டூவர்ட் ப்ரோட் 6/54, ஜேம்ஸ் அன்டர்சன் 4/76)

இங்கிலாந்து: 352/9 (துடுப்பாட்டம்: ஜேம்ஸ் வின்ஸ் 76, மார்க் ஸ்டோன்மன் 60, ஜோ றூட் 54, டேவிட் மலன் 53, ஜொனி பெயார்ஸ்டோ 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 4/94, நீல் வக்னர் 2/51, ட்ரெண்ட் போல்ட் 2/89)

நியூசிலாந்து: 256/8 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 83, இஷ் சோதி ஆ.இ 56, கொலின் டி கிரான்ட்ஹொம் 45 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 2/45, ஜேக் லீச் 2/61, ஸ்டூவர்ட் ப்ரோட் 2/72)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .