2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டொட்டமுண்டை வென்றது பெயார்ண்

Editorial   / 2017 நவம்பர் 05 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில் இடம்பெற்ற போட்டியொன்றில், பொரிசியா டொட்டமுண்டை, நடப்பு புண்டெலிஸ்கா சம்பியன்களான பெயார்ண் மியூனிச் வென்றுள்ளது.

இப்போட்டியின் 16ஆவது நிமிடத்தில், அபாரமான கோலொன்றைப் பெற்ற ஆர்ஜன் றொபின், ஆரம்பத்திலேயே பெயார்ண் மியூனிச்சுக்கு முன்னிலையை வழங்கினார். இதன்பின்னர், ஜொஷுவா கிம்மிச்சிடமிருந்து பெற்ற பந்தை போட்டியின் 37ஆவது நிமிடத்தில் கோலாக்கிய றொபேர்ட் லெவன்டோஸ்கி, பெயார்ண் மியூனிச்சின் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். தொடர்ந்து 67ஆவது நிமிடத்தில் டேவிட் அலபா பெற்ற கோலுடன் 3-0 என்ற முன்னிலையை பெயார்ண் மியூனிச் பெற்றது. இறுதியில், 88ஆவது நிமிடத்தில், பொரிசியா டொட்டமுண்டின் மார்க் பார்ட்ரா ஆறுதல் கோலொன்றைப் பெற, 3-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் முடிவில், 26 புள்ளிகளைப் பெற்றுள்ள பெயார்ண் மியூனிச், புண்டெலிஸ்கா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் தொடருகின்றது. பெயார்ண் மியூனிச்சை விட நான்கு புள்ளிகள் குறைவாக, 22 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்.பி லெய்ப்ஸிக், தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது. 20 புள்ளிகளைப் பெற்றுள்ள பொரிசியா டொட்டமுண்ட், தரவரிசையில் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

புண்டெலிஸ்கா தொடரை ஆறாவது தடவையாகவும் தொடர்ச்சியாக வெல்ல எதிர்பார்த்துள்ள பெயார்ண் மியூனிச், செப்டெம்பர் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற போட்டியில் ஹொபென்ஹெய்மிடம் 2-0 என்ற கோல் கணக்கில் எதிர்பாரதவிதமாக தோல்வியடைந்த பின்னர் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டு போட்டிகளில் சமநிலை முடிவைப் பெற்றுள்ளது. குறித்த போட்டியே இம்முறையும் சம்பியனாகுவதற்கு பெயார்ணுக்கு முக்கியமெனக் கருதப்பட்ட நிலையில், தற்போது இப்போட்டியிலும் பெயார்ண் வென்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X