2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமை தோற்கடித்தது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் இன்று  அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியொன்றில் 7-2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் வென்றது.

பயேர்ண் மியூனிச் சார்பாக, சேர்ஜி நர்பி நான்கு கோல்களையும், றொபேர்ட் லெவன்டோஸ்கி இரண்டு கோல்களையும், ஜோஷுவா கிம்மிச் ஒரு கோலையும் பெற்றனர். டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சண் ஹெயுங் மின், ஹரி கேன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பெல்ஜியக் கழகமான கிளப் ப்ரூகேயுடனான குழு ஏ போட்டியொன்றை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் முடித்திருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, சேர்ஜியோ றாமோஸ், கஸேமீரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிளப் ப்ரூகே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் இமானுவேல் பொனவெந்தூரே பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர் லெவர்குசனுடனான குழு டி போட்டியொன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், ஃபெடெரிக்கோ பெர்ணாட்டெக்கி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குரோஷியக் கழகமான டினமோ ஸக்ரெப்புடனான குழு சி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங், பில் ஃபொடென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, துருக்கியக் கழகமான கலாட்டாசரேயின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெளரோ இகார்டி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ரஷ்யக் கழகமான லொகோமோட்டிவ் மொஸ்கோவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, ஜோவா ஃபீலிக்ஸ், தோமஸ் பார்ட்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .