2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டொட்டென்ஹாமை வீழ்த்தியது ஆர்சனல்

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் அணியுடனான போட்டியில் ஆர்சனல் வென்றது.

இப்போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே, டொட்டென்ஹாமின் பின்கள வீரர் ஜான் வெர்டொங்கனின் கையில் பந்து பட்டதைத் தொடர்ந்து வழங்கப்ப்பட்ட பெனால்டியை ஆர்சனலின் பியரி எம்ரிக் அபுமெயாங் கோலாக்க அவ்வணி முன்னிலை பெற்றது.

எனினும், சக வீரர் கிறிஸ்டியன் எரிக்சனின் பிறீ கிக்கை போட்டியின் 30ஆவது நிமிடத்தில் கோலாக்கிய டொட்டென்ஹாமின் எரிக் டயர் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதோடு, அடுத்த நான்காவது நிமிடத்தில், டொட்டென்ஹாமின் சன் ஹெயுங் மின்னை ஆர்சனலின் றொப் ஹோல்டிங் விதிமுறைகளை மீறிக் கையாண்டதாக பெனால்டி வழங்கப்பட்ட நிலையில் அதை டொட்டென்ஹாமின் நட்சத்திர முன்கள வீரர் ஹரி கேன் கோலாக்கி தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், முதற்பாதி முடிவில் ஆர்சனல் பின்தங்கியிருந்த நிலையில், இரண்டாவது பாதியில் முன்களத்தில் அலெக்ஸ் இவோபிக்காக அலெக்ஸான்ட்ரே லகஸ்ரேயையும் மத்தியகளத்தில் ஹென்றிக் மிகித்தரயானுக்காக ஆரோம் றாம்சியையும் ஆர்சனலின் முகாமையாளர் உனை எம்ரே அறிமுகப்படுத்தினார்.

குறித்த மாற்றங்கள் சிறப்பானதாக அமைந்த நிலையில், ஆரோன் றாம்சி போட்டியின் 56ஆவது நிமிடத்தில் கொடுத்த பந்தை கோலாக்கிய பியரி எம்ரிக் அபுமெயாங் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதோடு, 74ஆவது நிமிடத்தில் அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற ஆர்சனல், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் லூகாஸ் டொரெய்யா பெற்றா கோலின் மூலம் தமது வெற்றியை உறுதிப்படுத்தி இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஏனைய முக்கிய அணிகளின் போட்டி முடிவுகள் பின்வருமாறு,

லிவர்பூலின் மைதானத்தில்,

லிவர்பூல் 1 – 0 எவெர்ற்றன்

டிவோக் ஒறிஜி 90+6

 

செல்சியின் மைதானத்தில்,

செல்சி 2 – 0 புல்ஹாம்

பெட்ரோ 4

ருபென் லொவ்டஸ் சீக் 82

அந்தவகையில், கடந்த வார போட்டிகளின் முடிவில், நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தின் புள்ளிக பட்டியல் பின்வருமாறு,

  1. மன்செஸ்டர் சிற்றி 38 புள்ளிகள்
  2. லிவர்பூல் 36 புள்ளிகள்
  3. செல்சி 31 புள்ளிகள்
  4. ஆர்சனல் 30 புள்ளிகள்
  5. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 30 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .