2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டொட்டென்ஹாமை வென்றது லிவர்பூல்

Editorial   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளில் லிவர்பூல், செல்சி, மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் உள்ளிட்ட அணிகள் வென்றன.

வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றிருந்தது. லிவர்பூல் சார்பாக, ஜோர்ஜினியோ விஜ்னால்டும், றொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாகப் பெறப்பட்ட கோலை எரிக் லமெலா பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற கார்டிப் சிற்றி அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, ஈடின் ஹஸார்ட் ஹட்-ட்ரிக் கோல்களைப் பெற்றதோடு வில்லியன் ஒரு கோலைப் பெற்றார். கார்டிப் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை சொல் பம்பா பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற புல்ஹாம் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, லெரோய் சனே, டேவிட் சில்வா, ரஹீம் ஸ்டேர்லிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, நியூகாசில் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, கிரனிட் ஸாகா, மெசுட் ஏஸில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கியரன் கிளார்க் பெற்றிருந்தார்.

இந்நிலையில், வட்போர்ட் அணியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, றொமேலு லுக்காக்கு, கிறிஸ் ஸ்மோலிங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வட்போர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே கிரே பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .