2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டொட்டென்ஹாம், றியல், சிற்றி அணிகள் வென்றன

Editorial   / 2017 செப்டெம்பர் 15 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளில், றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வெற்றிபெற்றதோடு, லிவர்பூல், செவில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.  

ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், 3-0 என்ற கோல் கணக்கில், சைப்ரஸ் கழகமான அப்போயல் நிகோஸியாவை வென்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களையும் சேர்ஜியோ றாமோஸ் 1 கோலையும் பெற்றனர்.  

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி, 4-0 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்துக் கழகமான பெயெனூர்ட்டை வென்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜோன் ஸ்டோன்ஸ் 2 கோல்களையும் சேர்ஜியோ அகுரோ, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.  

இதேவேளை, இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் இன்னொரு கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 3-1 என்ற கோல் கணக்கில், ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டை வென்றது. டொட்டென்ஹாம் சார்பாக, ஹரி கேன் இரண்டு கோல்களையும் சொங் மி ஒரு கோலையும் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரி யர்மொலெங்கோ பெற்றார்.  

இந்நிலையில், பிறிதொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், ஸ்பானியக் கழகமான செவில்லா ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக, றொபேர்ட்டோ பெர்மினோ, மொஹமட் சாலாஹ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர். செவில்லா சார்பாக, விஸாம் பென் யெடர், ஜோக்கின் கொரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  

இதேவேளை, இத்தாலியக் கழகமான நாப்போலி, 1-2 என்ற கோல் கணக்கில், உக்ரேனியக் கழகமான ஷக்டர் டொனெட்ஸ்கிடம் தோல்வியடைந்தது. இதுதவிர, பிரெஞ்சுக் கழகமான மொனாக்கோ, ஜேர்மனியக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X