2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாக சம்பியனான பயேர்ண் மியூனிச்

Shanmugan Murugavel   / 2021 மே 09 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பயேர்ண் மியூனிச் சம்பியனாகியுள்ளது.

பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், புண்டெஸ்லீகா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலிருந்த ஆர்.பி லெப்ய்ஸிக்குமிடையிலான போட்டியில், 2-3 என்ற கோல் கணக்கில் லெய்ப்ஸிக் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே மியூனிச் சம்பியனாகியிருந்தது.

ஏனெனில், இன்னும் இரண்டு போட்டிகளே லெய்ப்ஸிக்குக்கு இருக்கையில், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றாலும் 70 புள்ளிகளையே பெறலாம் என்ற நிலையில், மூன்று போட்டிகள் மீதமிருக்கையில் 71 புள்ளிகளை மியூனிச் ஏற்கெனவே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட போட்டியில் டொட்டமுண்ட் சார்பாக, ஜடோன் சஞ்சோ இரண்டு கோல்களையும், மார்கோ றொய்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். லெய்ப்ஸிக் சார்பாக, லூகாஸ் குளொஸ்டெர்மன், டனி ஒல்மோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், பின்னர் தமது மைதானத்தில் நடைபெற்ற பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் மியூனிச் வென்றிருந்தது. மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி மூன்று கோல்களையும், தோமஸ் மல்லர், கிங்ஸ்லி கோமன், லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .