2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் ஷம்சி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு, தென்னாபிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் தப்ரையாஸ் ஷம்சி முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை ஷம்சி அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. தப்ரையாஸ் ஷம்சி, 3. முஜீப் உர் ரஹ்மான், 4. அடில் ரஷீட், 5. அடம் ஸாம்பா, 6. அஸ்தன் அகர், 7. டிம் செளதி, 8. ஷெல்டன் கோட்ரல், 9. மிற்செல் சான்ட்னெர், 10. கிறிஸ் ஜோர்டான்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. லோகேஷ் ராகுல், 3. ஆரோன் பின்ஞ், 4. பாபர் அஸாம், 5. கிளென் மக்ஸ்வெல், 6. றஸி வான் டர் டுஸன், 7. விராட் கோலி, 8. கொலின் மன்றோ, 9. டிம் செய்ஃபேர்ட், 10. ஹஸரத்துல்லா ஸஸாய்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. கிளென் மக்ஸ்வெல், 4. றிச்சி பெரிங்டன், 5. ஷோன் வில்லியம்ஸ்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .