2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தரவரிசையில் எட்டாமிடத்துக்கு முன்னேறினார் ஹேரத்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரான ரங்கன ஹேரத் எட்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே குறித்த முன்னேற்றத்தை ரங்கன ஹேரத் அடைந்துள்ளார். மற்றும்படி முதல் 10 பந்துவீச்சாளர்களுக்குள் மாற்றமில்லாதபோதும் ரங்கன ஹேரத்தும் நீல் வக்னரும் எட்டாமிடத்தை பகர்ந்துள்ள நிலையில் ஜொஷ் ஹேசில்வூட் ஒரு இடம் கீழிறங்கி 10ஆம் இடத்தில் காணப்படுகின்றார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. கஜிஸோ றபாடா, 2. ஜேம்ஸ் அன்டர்சன், 3. இரவீந்திர ஜடேஜா, 4. வேர்ணன் பிலாந்தர், 5. இரவிச்சந்திரன் அஷ்வின், 6. பற் கமின்ஸ், 7. ட்ரெண்ட் போல்ட், 8. ரங்கன ஹேரத், 8. நீல் வக்னர், 10. ஜொஷ் ஹேசில்வூட்.

இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான் முதலாவது டெஸ்டில் 218 ஓட்டங்களைப் பெற்ற திமுத் கருணாரட்ண, டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுள் வேறெந்த மாற்றமும் இடம்பெறவில்லை. முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஸ்டீவ் ஸ்மித், 2. விராத் கோலி, 3. ஜோ றூட், 4. கேன் வில்லியம்சன், 5. டேவிட் வோணர், 6. செட்டேஸ்வர் புஜாரா, 7. ஏய்டன் மர்க்ரம், 8. டீன் எல்கர், 9. தினேஷ் சந்திமால், 10. திமுத் கருணாரத்ன.

இந்நிலையில், பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என பங்களாதேஷை வெள்ளையடித்த மேற்கிந்தியத் தீவுகள், டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து எட்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், எட்டாமிடத்திலிருந்த பங்களாதேஷ் ஒன்பதாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. இதுதவிர அணிகளின் தரவரிசையில் வேறெந்த மாற்றமும் ஏற்படவில்லை. அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

  1. இந்தியா, 2. தென்னாபிரிக்கா, 3. அவுஸ்திரேலியா, 4. நியூசிலாந்து, 5. இங்கிலாந்து, 6. இலங்கை, 7. பாகிஸ்தான், 8. மேற்கிந்தியத் தீவுகள், 9. பங்களாதேஷ், 10. சிம்பாப்வே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X