2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் கவலையளிக்கிறது’ ஸ்மித்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், தென்னாபிரிக்காவில் இருந்து போட்டியின் இடைநடுவில் நாடு திரும்பிய  அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் "தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

“எனது அணியின் சக வீரர்களும், உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய இரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.

கேப்டவுனில் நடந்த விடயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்துகொள்கிறேன்.

தலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.

இதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.

என்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.

நல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.

எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்துவிட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்." என  ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .