2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகின்றது இன்று

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியை நியூசிலாந்தும் இரண்டாவது போட்டியை பாகிஸ்தானும் வென்ற நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது போட்டி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபு தாபியில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்ட தோட்பட்டை காயம் காரணமான பாகிஸ்தானின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் அப்பாஸ் இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என்ற நிலையில், அவருக்குப் பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் அப்ரிடி டெஸ்ட் போட்டிகளில் இன்று அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .