2024 மார்ச் 28, வியாழக்கிழமை

துனீஷியாவை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2018 ஜூன் 19 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத் தொடரில், நேற்று இடம்பெற்ற துனீஷியாவுடனான குழு ஜி போட்டியில் தமது அணியின் தலைவர் ஹரி கேனின் இறுதி நேரக் கோல் கைகொடுக்க இங்கிலாந்து வென்றிருந்தது.

வொல்கோகிராட்டில் நடைபெற்ற இப்போட்டியின் 11ஆவது நிமிடத்தில், இங்கிலாந்து அணியின் ஜோ ஸ்டோன்ஸ் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டிய பந்தை துனீஷியாவின் கோல் காப்பாளர் மூயேஸ் ஹஸன் தடுத்திருந்தார். எனினும் அவர் தடுத்த பந்து ஹரி கேனை நோக்கி வர அவர் அதனை கோலாக்கி இங்கிலாந்துக்கு முன்னிலையை வழங்கினார்.

எனினும் போட்டியின் 35ஆவது நிமிடத்தில், துனீஷியாவின் பக்ரெட்டின் பென் யூசுப்பை இங்கிலாந்தின் கைல் வோக்கர் வீழ்த்த வழங்கப்பட்ட பெனால்டியை பெர்ஜனி சஸி கோலாக்க கோலெண்ணிக்கை சமமானது.

எவ்வாறெனினும் போட்டியின் இறுதி நிமிடங்களில், தனதணியின் ஹரி மக்கியூரின் கால்களிலிருந்து வந்த பந்தை ஹரி கேன் தலையால் முட்டிக் கோலாக்க 2-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், நேற்று  நடைபெற்ற மற்றைய குழு ஜி போட்டியில், பனாமாவை 3-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றிருந்தது. பெல்ஜியம் சார்பாக, றொமேலு லுக்காக்கு இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தென்கொரியாவுடனான குழு எவ் போட்டியொன்றில், பெனால்டி மூலம் அன்ட்ரயாஸ் கிரான்ஸ்கிஸ் பெற்ற கோல் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் வென்றது.

இந்ந உலகக் கிண்ணத் தொடரிலேயே காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், உலகக் கிண்ணம் ஆரம்பித்த ஐந்து நாட்களுக்குள்ளேயே இந்த அமைப்பின் தொடர்ச்சித் தன்மை, வெளிப்படைத் தன்மை தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X