2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரை வென்றது இந்தியா

Editorial   / 2018 பெப்ரவரி 25 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரை 2-1 என்ற ரீதியில் இந்தியா வென்றது.

கேப் டெளணில் நேற்று  இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே குறித்த தொடரை இந்தியா வென்றிருந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஜெ.பி டுமினி, தமது அணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 47 (40), சுரேஷ் ரெய்னா 43 (27), ஹர்டிக் பாண்டியா 21 (17), தினேஷ் கார்த்திக் 13 (06) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜூனியர் டலா 3, கிறிஸ் மொறிஸ் 2, தப்ரையாஸ் ஷம்சி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 173 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று ஏழு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜெ.பி டுமினி 55 (41), அறிமுக வீரர் கிறிஸ்டியான் ஜொங்கர் 49 (24), டேவிட் மில்லர் 24 (23), பர்ஹான் பெஹத்ரியன் ஆட்டமிழக்காமல் 15 (06) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், புவ்னேஷ்வர் குமார் 2, ஹர்டிக் பாண்டியா, ஷர்டுல் தாக்கூர், சுரேஷ் ரெய்னா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக சுரேஷ் ரெய்னா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .