2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தொடரில் உத்தியோகபூர்வ தேர்வாளராக ஹத்துருசிங்க

Editorial   / 2018 ஜனவரி 08 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருடன் தொடரின் உத்தியோகபூர்வ தேர்வாளரொருவராக, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்கவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.

எவ்வாறெனினும், தொடரொன்றுக்காக குழாமைத் தெரிவு செய்யும் உத்தியோகபூர்வ பணியை சந்திக ஹத்துருசிங்க ஆற்றமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், குழாமைத் தெரிவு செய்வதற்கான பணியை கிரேமி லப்ரோய் தலைமையிலான தேர்வாளர் குழாமே ஆற்றவுள்ளது.

எனினும் குழாம் தெரிவு செய்யப்பட்டவுடன், ஒவ்வொரு போட்டிக்குமான விளையாடும் பதினொருவர் அணியை சந்திக ஹத்துருசிங்க, அசங்க குருசிங்க, அணியின் தலைவர் ஆகியோரைக் கொண்ட தொடரின் தேர்வுக் குழாமே தெரிவுசெய்யவுள்ளது.

குறித்த புதிய தேர்வு நடைமுறை, நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் அதிசிறப்பு தேர்வுக் குழுக் கூட்டத்திலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்தபோது தேர்வாளராகவும் சந்திக ஹத்துருசிங்க கடமையாற்றியிருந்த நிலையில், தேர்வாளராக சந்திக ஹத்துருசிங்க விரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் இலங்கையின் விளையாட்டு விதிப்படி, தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரொருவர் அவ்வணியின் தேர்வாளராக கடமையாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, சந்திக ஹத்துருசிங்க விரும்பிய அதிகாரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கும் முயற்சியாகவே மேற்படி தீர்மானம் நோக்கப்படுகிறது.

எனினும், தொடரின் தலைமைத் தேர்வாளர் பதவி சந்திக ஹத்துருசிங்கவுக்கு வழங்கப்படவில்லை. அப்பதவி அசங்க குருசிங்கவிடமே காணப்படுகிறது.

இந்நிலையில், பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவர் நாளை அறிவிக்கப்படவுள்ளார்.  அணித்தலைவர் பதவியிலிருந்து கடந்தாண்டு இராஜினாமா செய்த அஞ்சலோ மத்தியூஸே அணித்தலைவராக பெரும்பாலும் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .