2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு 5 விக்கெட்டுகள் தேவை

Shanmugan Murugavel   / 2021 மே 02 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை வெல்வதற்கு, இன்றைய இறுதி நாளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியுள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், பல்லேகலவில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த குறித்த இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, லஹிரு திரிமான்னவின் 140, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் 118, ஒஷாத பெர்ணான்டோவின் 81, நிரோஷன் டிக்வெல்லவின் ஆட்டமிழக்காத 77, ரமேஷ் மென்டிஸின் 33, பதும் நிஸங்கவின் 30 ஓட்டங்களோடு, தமது முதலாவது இனிங்ஸை 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்றதுடன் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், தஸ்கின் அஹ்மட் 4, தஜியுல் இஸ்லாம், ஷொரிஃபுல் இஸ்லாம், மெஹிடி ஹஸன் மிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாம, தமிம் இக்பால் 92, அணித்தலைவர் மொமினுல் ஹக் 49, முஷ்பிக்கூர் ரஹீம் 40, சைஃப் ஹஸன் 25, மெஹிடி 16 ஓட்டங்களைப் பெற்றபோதும், பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் 6, ரமேஷ் மென்டிஸின் 2, சுரங்க லக்மாலிடம் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, கருணாரத்னவின் 66, தனஞ்சய டி சில்வாவின் 41, பதும் நிஸங்கவின் 24, நிரோஷன் டிக்வெல்லவின் 24 ஓட்டங்களோடு, 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் 5, மெஹிடி 2, தஸ்கின் அஹ்மட் 1, சைஃப் ஹஸன் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அந்தவகையில், 437 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி வருகின்ற பங்களாதேஷ், ரமேஷ் மென்டிஸிடம் 3, பிரவீன் ஜெயவிக்கிரமவிடம் 2 விக்கெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் இழந்து, இன்றைய நான்காம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், லிட்டன் தாஸ் 14, மெஹிடி நான்கு ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர். முன்னதாக, ரஹீம் 40, சைஃப் ஹஸைன் 34, மொமினுல் 32, நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 26, தமிம் இக்பால் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X