2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக சம்பியனானது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2019 மே 19 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக பயேர்ண் மியூனிச் சம்பியனானது.

தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஐன்ரச்ட் ஃபிராங்பேர்ட்டுடனான தமது நடப்பு புண்டெலிஸ்கா பருவகால இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்து பயேர்ண் மியூனிச் சம்பியனானது.

இப்போட்டியின் நான்காவது நிமிடத்திலேயே, சக முன்களவீரர்கள் றொபேர்ட் லெவன்டோஸ்கி, தோமஸ் மல்லரால் உருவாக்கப்பட்ட கோல் பெறும் வாய்ப்பைக் கோலாக்கிய பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரர் கிங்ஸ்லி கோலாக்க முன்னிலை பெற்ற பயேர்ண் மியூனிச், முதற்பாதி முடிவில் குறித்த கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை இருந்தது.

பின்னர், 50ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய ஐன்ரச்ட் ஃபிராங்பேர்ட்டின் செபஸ்டியன் ஹல்லர் கோலொன்றைப் பெற்று சமப்படுத்தியபோதும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் தோமஸ் மல்லரின் கோல் கம்பத்தை நோக்கிய உதை ஐன்ரச்ட் ஃபிராங்பேர்ட்டின் கோல் காப்பாளர் கெவின் ட்ரப்பால் தடுக்கப்பட்டு வந்த நிலையில் அதைக் கோலாக்கிய பயேர்ண் மியூனிச்சின் பின்களவீரரான டேவிட் அலபா தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்த ஐந்தாவது நிமிடத்தில், பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான றெனட்டோ சந்தேஸ், 72ஆவது, 76ஆவது நிமிடங்களில் முன்களவீரர்களாக ஃபிராங் றிபெரி, ஆர்ஜன் றொபின் பெற்ற கோல்களோடு இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் பயேர்ண் மியூனிச் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .