2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோற்கடிக்கப்பட்டனர் நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பயேர்ண் லெவர்குசன் அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்கடிக்கப்பட்டது.

இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில், சக முன்கள வீரர் தோமஸ் முல்லரிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய பயேர்ண் மியூனிச்சின் மத்தியகள வீரர் லியோன் கொரெட்ஸ்கா தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

இந்நிலையில், 53ஆவது நிமிடத்தில் பயேர்ண் லெவர்குசனின் முன்கள வீரரான லியோன் பெய்லி, கோல் கம்பத்திலிருந்து 25 மீற்றர் தூரத்திலிருந்தான பிறீ கிக்கொன்றின் மூலம் அபாரமாக கோலொன்றைப் பெற்று கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். அடுத்த 10ஆவது நிமிடத்தில், பயேர்ண் லெவர்குசனின் மற்றொரு முன்கள வீரரான கெவின் வொலன்ட் கோலொன்றைப் பெற அவ்வணி முன்னிலை பெற்றது.

பின்னர், 87ஆவது நிமிடத்தில் சக மத்தியகள வீரரான ஜூலியன் பிரான்டிடமிருந்து பெற்ற பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய பயேர்ண் லெவர்குசனின் முன்கள வீரரான லூகாஸ் அலரியோ கோலாக்க இறுதியில் அவ்வணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, ஐன்ரச்ட் பிராங்பேர்ட் அணியின் மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் சமநிலையில் முடித்துக் கொண்டது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ றொய்ஸ் பெற்றதுடன், ஐன்ரச்ட் பிராங்பேர்ட் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகா ஜோவிக் பெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X