2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தோற்ற பெடரர் முதலிடத்தை இழக்கிறார்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர், மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தனது முதல்நிலையை இழக்கவுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் தனசி கொக்கினகிஸிடமே 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தோல்வியடைந்திருந்தார்.

இதேவேளை, உலகின் தற்போதைய இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலிடமே தனது முதலிடத்தை இழக்கவுள்ள ரொஜர் பெடரர், பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர் உள்ளிட்ட களிமண் தரையிலான டென்னிஸ் போட்டிகள் பருவகாலத்தை தவறவிடவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-3, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னியஸ்கா றட்வன்ஸ்காவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் கிறிஸ்டினா மக்கேலை வென்று நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .