2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நற்வெஸ்ட் பிளாஸ்ட்: சம்பியனானது நொட்டிங்கம்ஷையர்

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான நற்வெஸ்ட் இ-20 பிளாஸ்ட் தொடரின் சம்பியன்களாக, நொட்டிங்கம்ஷையர் அணி தெரிவாகியுள்ளது. வோர்விக்‌ஷையர் அணிக்கெதிரான போட்டியில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, நொட்டிங்கம்ஷையர் அணி, சம்பியனானது.

எட்ஜ்பஸ்டனில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வோர்விக்‌ஷையர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நொட்டிங்கம்ஷையர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து, 3 விக்கெட்டுகளை இழந்து 30 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி சார்பாக, 4ஆவது விக்கெட்டுக்காக 132 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன. பின்னர் 5ஆவது விக்கெட்டுக்காக, இறுதி 11 பந்துகளில் 28 ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

துடுப்பாட்டத்தில் பிரென்டன் டெய்லர் 65 (49), சமித் பட்டேல் ஆட்டமிழக்காமல் 64 (42), டானியல் கிறிஸ்டியன் ஆட்டமிழக்காமல் 24 (7) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

191 ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய வோர்விக்‌ஷையர், ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சாம் ஹெய்ன் 72 (44), கொலின் டி கிரான்டோம் 27 (19), ஆரொன் தோமஸன் 26 (13) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹரி கேர்னி 4 விக்கெட்டுகளையும் ஜேக் போல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, சமித் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .