2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நான்காவது சுற்றில் நடால், ஹலெப்

Editorial   / 2018 ஜூன் 03 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று  இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்ற உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் ஆகியோர் நான்காவது சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

நடப்புச் சம்பியனான ரபேல் நடால், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கட்டை வென்றார்.

சிமோனா ஹலெப், 7-5, 6-0 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் அன்ட்ரியா பெட்கோவிக்கை வென்றார்.

உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கர்பைன் முகுருஸா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கர்சியா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் றோமானியாவின் இரினா-கமெலியா பெகுவை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-7 (6-8), 6-7 (4-7) என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் அனெட் கொந்தாவெய்ட்டிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சொலனி ஸ்டீபன்ஸ், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 4-6, 6-1, 8-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

உலகின் நான்காம் நிலை வீரான குரோஷியாவின் மரின் சிலிச், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டீவ் ஜோன்ஸனை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

உலகின் ஏழாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-7 (3-7), 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் மிஷா ஸவ்ரேவ்வை வென்று நான்காவது சுற்றுப் போட்டிகுத் தகுதிபெற்றார்.

உலகின் 10ஆம் நிலை வீரரான ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 7-6 (7-1), 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பியரி-ஹியூஸ் ஹெர்பேர்ட்டை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .