2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நான்காவது டெஸ்டில் ஸ்டார்க் இல்லை

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், மெல்பேணில் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நான்காவது டெஸ்டிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை வேகப்பந்துவீச்சாளரான மிற்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

குதிக்கால் உபாதை குணமடையாததன் காரணமாகவே இப்போட்டியிலிருந்து மிற்செல் ஸ்டார்க் விலகியுள்ளார். அந்தவகையில், பொக்ஸிங் டே என்றழைக்கப்படும் டிசெம்பர் 26ஆம் திகதி மெல்பேணில் ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டிகளில், கடந்த ஏழாண்டுகளில் ஒன்றில் மட்டுமே மிற்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.

இதேவேளை, விலாவென்பு முடிவடைந்தமை காரணமாக வேகப்பந்துவீச்சாளர் கிரேய்க் ஒவெர்ட்டனும் இப்போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து உறுதிப்படுத்தியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .