2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை அறிமுகத்தை மேற்கொள்கிறாரா கிரேன்?

Editorial   / 2018 ஜனவரி 03 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்தின் புறச்சுழற்பந்துவீச்சாளரான மேஸன் கிரேன் டெஸ்ட் போட்டிகளில் தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் மொயின் அலி அல்லது வேகப்பந்துவீச்சாளர் டொம் குரானுக்குப் பதிலாகவே, இங்கிலாந்து சார்பாக இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மேஸன் கிரேன், நாளைய போட்டியில் இங்கிலாந்து அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷஸ் தொடரை இங்கிலாந்து இழந்துள்ள நிலையிலும் வெள்ளையடிப்பைத் தவிர்த்துள்ள நிலையிலுமே மேஸன் கிரேனை சோதிப்பதற்கான சந்தர்ப்பமாக இதை இங்கிலாந்து நோக்குகிறது.

அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளில் மேஸன் கிரேன் நாளை அறிமுகத்தை மேற்கொண்டால், அவரின் வளர்ச்சி அபரிதமானதொன்றாகவே இருக்கும். ஏனெனில், இங்கிலாந்தில் முதற்தரப் போட்டிகளில் கடந்தாண்டு 16 விக்கெட்டுகளை மாத்திரமே, அதுவும் 44.68 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற வகையிலேயே மேஸன் கிரேன் கைப்பற்றியிருந்தார். எனினும் ஓராண்டுக்கு முன்னர் சிட்னியில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய மேஸன் கிரேன், நான்கு 5 விக்கெட் பெறுதிகளையும் 3 ஏழு விக்கெட் பெறுதிகளையும் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், அதிகமாக, இத்தொடரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியதோடு, வெறும் 19.42 என்ற சராசரியையே துடுப்பாட்டத்தில் கொண்டிருக்கின்ற மொயின் அலியையே மேஸன் கிரேன் பிரதியீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் சுழற்பந்துவீச்சுக்கு சிட்னி ஆடுகளம் ஒத்துழைக்கும் என இங்கிலாந்து கருதினால், மொயின் அலியும் நாளைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .