2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியூகாசில் யுனைட்டெட்டை வென்றது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2017 டிசெம்பர் 28 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில், நியூகாசில் யுனைட்டெட்டை மன்செஸ்டர் சிற்றி வென்றுள்ளது.

இப்போட்டியின் முதல் 30 நிமிடங்களில், மன்செஸ்டர் சிற்றியின் முன்கள வீரர் சேர்ஜியோ அகுரோவின் இரண்டு உதைகள் கோல் கம்பத்தில் பட்டிருந்த நிலையில், கெவின் டி ப்ரூனே கொடுத்த பந்தை போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது. இந்நிலையில், போட்டியின் முதற்பாதி முடிவடைய முன்னர், நியூகாசில் யுனைட்டெட்டின் முன்கள வீரர் றொலன்டோ ஆரோன்ஸ் கோல் கம்பத்தை நோக்கி உதைத்த உதையொன்றை மன்செஸ்டர் சிற்றியின் மத்திய பின்கள வீரர் நிக்கொலஸ் ஒட்டமென்டி தடுக்க, முதற்பாதி அத்துடன் முவடைந்தது.

தொடர்ந்த இரண்டாவது பாதியில் கெவின் டி ப்ரூனேயின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், மற்றையது கோல் கம்பத்துக்கு வெளியே சென்றது. இறுதியில் போட்டியின் கடைசி ஐந்து நிமிடங்களில் நியூகாசில் யுனைட்டெட்டின் முன்கள வீரர் கிறிஸ்டியன் அஸ்டு கொடுத்த பந்தை மற்றொரு முன்கள வீரரான டுவைட் கெய்ல் தலையால் மோத அது கோல் கம்பத்துக்கு வெளியால் சென்றது.

அந்தவகையில், போட்டி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இப்பருவகால இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் தொடர்ச்சியான 18ஆவது வெற்றியைப் பதிவுசெய்து கொண்டது.

இப்போட்டியின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 58 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, தரவரிசையில் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுகிறது. மன்செஸ்டர் சிற்றியை விட 15 புள்ளிகள் குறைவாக 43 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றது. மன்செஸ்டர் யுனைட்டெட்டை விட ஒரு புள்ளி குறைவாக 42 புள்ளிகளைப் பெற்றுள்ள செல்சி, மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

லிவர்பூல் 38 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 37 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் காணப்படுவதோடு, 34 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகிறது. இதில், ஆர்சனல், மற்றைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X