2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கு வெற்றியிலக்கு 382 ஓட்டங்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்துக்கு வெற்றியிலக்காக 382 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமது இரண்டாவது இனிங்ஸில் 382 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து, இன்றைய நான்காள் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்படும்போது விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், டொம் லேதம் 25, ஜீட் றாவல் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.

முன்னதாக, தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய நான்காம் நாளை ஆரம்பித்த இங்கிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 352 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. துடுப்பாட்டத்தில், ஜேம்ஸ் வின்ஸ் 76, மார்க் ஸ்டோன்மன் 60, ஜோ றூட் 54, டேவிட் மலன் 53, ஜொனி பெயார்ஸ்டோ 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கொலின் டி கிரான்ட்ஹொம் 4, நீல் வக்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்து தமது முதலாவது இனிங்ஸில் 307 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததுடன், நியூசிலாந்து தமது முதலாவது இனிங்ஸில் 278 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X