2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நியூசிலாந்தை வென்று சம்பியனாகியது அவுஸ்திரேலியா

Editorial   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா சம்பியனாகியது.

ஓக்லன்டில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் நியூசிலாந்தை வென்றே இத்தொடரில் அவுஸ்திரேலியா சம்பியனாகியது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 43 (38), கொலின் மன்றோ 29 (14), மார்டின் கப்தில் 21 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஸ்தன் அகர் 3, கேன் றிச்சர்ட்ஸன், அன்றூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 151 ஓட்டங்களென்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றிருக்க மழை குறுக்கிட்டதோடு போட்டி முடிவுக்கு வர டக் வேர்த் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலியா வென்று சம்பியனானது. துடுப்பாட்டத்தில், டார்சி ஷோர்ட் 50 (30), டேவிட் வோணர் 25 (23), கிளென் மக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 20 (18), ஆரோன் பின்ஞ் ஆட்டமிழக்காமல் 18 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இஷ் சோதி, மிற்செல் சான்ட்னெர், கொலின் மன்றோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக அஸ்தன் அகரும் தொடரின் நாயகனாக கிளென் மக்ஸ்வெல்லும் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .