2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நீக்கப்பட்ட பின்னர் மூன்று வாய்ப்புகளை புறக்கணித்தேன்’

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பணி வாய்ப்புகள் மூன்றை நிராகரித்ததாக ஜொஸே மொரின்யோ தெரிவித்துள்ளார்.

போட்டி முடிவிகளில், விளையாடும் பாணியில் அல்லது இளம் வீரர்களை மேம்படுத்துவதில் எதுவித்த முன்னேற்றமுமில்லை எனத் தெரிவித்து 55 வயதான ஜொஸே மொரின்யோவை கடந்த மாதம் தமது முகாமையாளர் பதவியிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் நீக்கியிருந்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஜொஸே மொரின்யோ, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர்கள் ஜுர்ஜன் க்ளொப், பெப் குவார்டிலோ கொண்டிருக்கின்ற நிலைமைகளைக் கொண்டிருக்கின்ற கழகமொன்றுக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.

மன்செஸ்டர் யுனைட்டெட்டால் வழங்கப்பட்ட தொகையின் பகுதியாகவுள்ள வெளிப்படுத்தாத ஒப்பந்தமொன்றில் ஜொஸே மொரின்யோ கைச்சாத்திட்டதாக நம்பப்படுகையில், தான் மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து கதைக்க முடியாது. எவ்வாறெனினும் சில விடயங்களை மொரின்யோ வெளிப்படுத்தியுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்கள வீரர்கள் அன்டோனி மார்ஷியல், மார்க்கஸ் றஷ்போர்ட், பின்கள வீரர் லுக் ஷா ஆகியோரை ஜொஸே மொரின்யோ விமர்சித்துள்ளார். இந்நிலையில், பயிற்சியின்போது விமர்சிக்கையில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்குமாறு வீரரொருவர் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தர்ப்பத்தை தான் நிர்வகித்த இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்னாள் முன்கள வீரர் டிடியன் ட்ரொக்பாவுடன் ஒப்பிட்ட ஜொஸே மொரின்யோ, முகாமையாளரிடமிருந்து மேலதிக அழுத்தம் டிடியன் ட்ரொக்பாவுக்கு வழங்கப்பட்டபோது அவரது பெறுபேறு மேலும் தரமாய் இருந்ததாகக் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X