2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா: முன்னிலையில் அவுஸ்திரேலியா

Editorial   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் முடிவில், இரு அணிகளும் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஒரு விக்கெட்டை இழந்து 45 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, 221 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

நாளின் ஆரம்பத்திலேயே 2ஆவது, 3ஆவது விக்கெட்டுகளை இழந்த அவ்வணி, 4ஆவது விக்கெட்டுக்காகச் சிறப்பாக விளையாடியது. இணை சேர்ந்த தமிம் இக்பாலும் முஷ்பிக்கூர் ரஹீமும், 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து, தமது அணிக்கு முன்னிலையை வழங்கினர். ஆனால், இக்பாலின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர், அவ்வணி மீண்டும் தடுமாறி, 221 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இக்பால் 78, ரஹீம் 41 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், தனது 10ஆவது 5 விக்கெட் பெறுதியைப் பெற்ற நேதன் லையன், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர அஸ்டன் ஏகர், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

265 ஓட்டங்கள் என்ற வெற்றிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 28 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், இணை சேர்ந்த உப தலைவர் டேவிட் வோணர், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர், பிரிக்கப்படாத 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவ்வணி, 2 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் வோணர், ஸ்மித் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 75, 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X