2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பதவி விலகுகிறார் டேவிட் ரிச்சர்ட்சன்

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டிகளுடன், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பதவி விலகவுள்ளாரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிச்சர்ட்சன், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தப் பதவியில் அமர்த்தப்படுவதற்கு முன்பதாக, 2002ஆம் ஆண்டிலிருந்து கிரிக்கெட் பேரவையின் பொது முகாமையாளராகக் கடமையாற்றி வந்தவராவார்.

“தாம் ஓய்வுபெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, ஒரு கிரிக்கெட் வீரர் உணரும் தருணம் மிகக் கடினமானது, எனினும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம், அதற்கு சரியான நேரமாக இருக்மென நான் நினைக்கின்றேன்” என்று, டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் சர்வசேதக் கிரிக்கெட் பேரவையுடன் இணைந்திருந்த காலத்தை, மகிழ்ச்சியானதாகவே கருதுகின்றேன்” எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் காலப்பகுதியில், கிரிக்கெட்டில் சில முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்த முடிந்ததையிட்டு, நான் தனிப்பட்ட ரீதியில் மகிழ்ச்சி அடைகின்றேன். அனைத்து வீரர்களும், அனைத்துவிதமான போட்டிகளிலும் முழுமையாகப் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த முடிந்ததில் திருப்தி” என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரான ரிச்சர்ட்சன், 1992ஆம் ஆண்டு முதல் 1998 வரை, 42 டெஸ்ட் போட்டிகளில், அந்த அணி சார்பில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X